ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு பயன்படுத்தலாம்..!

Default Image

 

ஆங்கர் நிறுவனம் அதன் ஸ்மார்ட் ஹோம் பிராண்டான ஈபி, எவர்கேம் என்ற புதிய செக்யூரிட்டி கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 1080p திறனுள்ள வீட்டின் உற்புறம் மற்றும் வெளிப்புறம் பயன்படுத்தும் வகையிலான முற்றிலுமான வயர்லெஸ் கேமரா.

பெரும்பாலான செக்யூரிட்டி கேமராக்கள் எப்போதும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த எவர்கேமை ஒரு முறை சார்ஜ் செய்தால் 365நாட்கள் உபயோகிக்கலாம் என்ற உத்திரவாதம் அளிக்கப்படுகிறது. மேலும் இப்போதே 1600 பேரிடமிருந்து சுமார் 500,000 டாலர்(ரூ3.3 கோடி) நிதி திரட்டப்பட்டுள்ளது.

முழுவதும் நீர் எதிர்ப்பு சக்தியுள்ள, எச்.டி தரத்தில் பதிவு செய்யும் இந்த எவர்கேம் செக்யூரிட்டி கேமராவில் இன்பில்ட் மேக்னெட் இருப்பதால் சுவற்றில் பொறுத்த தேவையில்லை. எதாவது உலோக தளத்தில் வைத்தால் போதுமானது. சுவற்றில் பொருத்துவதற்கு ஏதுவாக வசதிகளும் உள்ளன. இந்த எவர்கேமின் சிறப்பம்சமாக பார்க்கப்படுவது 13400 mAh லித்தியம் அயான் பேட்டரி.

ஒரு முறை சார்ஜ் செய்தால், செயல்படும் நிலையில் 1 வருடமும், செயல்படா நிலையில் 3 வருடமும் இந்த பேட்டரி தாக்கு பிடிக்கும் என ஆங்கர் நிறுவனம் கூறுகிறது.

இந்த எவர்கேமில் லார்ஜ் f2.2 அபெர்சர் உள்ள சோனி எக்ஸ்மோர் IMX 323 சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் லென்ஸ் 140 டிகிரி கோணம் உள்ளதால் பானோரோமிக வியூ தரக்கூடியது. பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, ஏதேனும் அசைவுகள் அல்லது புதிய நபர்களின் முகங்கள் தெரிந்தாலோ எச்சரிக்கை செய்யப்படும். இந்த கேமராவில் உள்ள 16GB மைக்ரோ எஸ்.டி கார்டு AES 128பிட் மறைகுறியாக்கல்(Encryption) மூலம் பாதுகாக்கப்படுகிறது.

பதிவு செய்யப்பட்ட அனைத்தையும் பார்க்க இந்த எஸ்.டி கார்டை பேஸ் ஸ்டேசன், கணிணி அல்லது ஸ்மார்ட்போனில் இணைக்கவேண்டும். மேலும் அதிக பாதுகாப்பிற்காக இந்த வீடியோக்களை க்ளவுட் முறையிலும் சேமிக்கலாம். நிகழ்நேரத்தில் வீடியோக்களை கிளவுட்டில் சேமிக்கவும் பார்க்கவும் மாதாந்திர கட்டணம் 2.99டாலர்கள்.

இந்த எவர்கேம் வீடியோக்களை, எபி மொபைல் ஆப் மூலம் ஸ்மார்ட்போனிலும் லைவ்வாக பார்க்கமுடியும். மேலும் அலெஸ்கா, கூகுள் சப்போர்ட் மற்றும் ஐ.எப்.டி.டி.டி போன்றவற்றின் மூலம் வாய்ஸ் கமாண்டு உதவியோடு வீடியோ பார்க்கும் வசதியும் இணைக்க ஆங்கர் நிறுவனம் திட்டமிடுகிறது. விலை நிலவரத்தை பொறுத்தவரை, இந்த பிராஜக்டுக்கு ஊக்கமளிக்கும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு கேமரா 219 டாலர் (ரூ14,400)விலையிலும், விற்பனை விலை 329 டாலர்(ரூ21,600) எனவும் நிர்ணயித்துள்ளது. அதுவே இரண்டு கேமராக்களுக்கு 329டாலர் (ரூ21,600) மற்றும் விற்பனைவிலை 499டாலர்(ரூ32,700) ஆகவும் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்