“இதைக் கடைபிடித்தால் கொரோனா வராது”-சீமான் டிப்ஸ்…!
கொரோனா வராமல் தடுக்கும் உணவுப்பழக்கங்கள் குறித்து சீமான்,செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம்,நடிகர் விவேக் இறப்பு குறித்து சமீபத்தில் செய்தியாளர்கள் கேள்வி கேட்டுள்ளனர்.இதனையடுத்து,சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறுகையில்,”நடிகர் விவேக் மிகவும் அன்பானவர்,நான் விசாரித்த வரையில் விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி காரணம் அல்ல.விவேக்கிற்கு ஏற்கனவே அடைப்பு இருந்துள்ளது”,என்று கூறினார்.
மேலும்,”நோய் தொற்று அதிகரித்து வருவதற்கேற்ப நாம் வசதிகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.இது அரசு அல்லது மருத்துவர்களின் கடமை என்று நினைக்காமல் நம் ஒவ்வொருவரின் கடமை என்று நினைக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல்,மக்கள் அனைவரும் கருஞ்சீரகத்தைப் பயன்படுத்துங்கள்,மிளகினை புழுங்கல் அரிசியோடு சேர்த்து மென்று விழுங்குங்கள்.தினமும் 3 வேளை இவ்வாறு செய்தால் கொரோனா போன்ற எந்த நோய்த் தொற்றும் உடம்புக்குள் செல்லாது.இதை செய்வதால்தான் நானும் கொரோனாவிலிருந்து தப்பித்து உள்ளேன்.
கொரோனா பரவலை தடுக்க வெந்நீர் அதிகமாக குடியுங்கள்.மேலும் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் நம் பாரம்பரிய உணவுகளான நாட்டுக்கோழிச் சாறு,மிளகு ரசம் குடியுங்கள்.மேலும்,தொடர்ந்து முட்டை,காய்கறி மற்றும் பழங்கள் போன்ற இயற்கை உணவுகளை உண்டு பாதுகாப்பாக இருங்கள்”,என்று கூறியுள்ளார்.