ஜெயராமுக்கு ஜோடியாகும் சண்டக்கோழி பட நடிகை..??
5 வருடங்கள் கழித்து மீண்டும் நடிகை மீரா ஜாஸ்மின் சினிமாவில் நடிக்கவுள்ளார்.
நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் சினிமாவில் ரன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சண்டைக்கோழி, ஆஞ்சநேயா, புதிய கீதை போன்ற திரைப்படங்களில் நடித்தார். அதற்கு பிறகு அந்த அளவிற்கு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம். இந்த நிலையில் தற்போது 5 வருடங்கள் கழித்து மீண்டும் நடிகை மீரா ஜாஸ்மின் சினிமாவில் நடிக்கவுள்ளார்.
5 வருடங்கள் கழித்து ரீ எண்ட்ரி கொடுக்கும் வகையில், நடிகை மீரா ஜாஸ்மின் ஜெயராமுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை சத்தியன் அந்திக்காடு இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.