#BREAKING: ஆந்திராவுக்கு ஆக்சிஜன்.., ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணை..!
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ஆக்சிஜன் அனுப்பியது குறித்து ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணை
கொரோனாவின் 2-வது அலை காரணமாக வட மாநிலங்களில் கடுமையான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை நிலவிவருகிறது. இதற்கிடையில், ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசின் ஒப்புதல் இன்றி மத்திய அரசு ஆந்திரா, தெலுங்கானா அனுப்பியதாக சர்ச்சையானது.
இதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில், தமிழகத்தில் தயாரான ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கானாவுக்கு அனுப்பியது குறித்து ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.
ஆக்சிஜன் விவகாரத்தை தாமாக முன்வந்து சென்னை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தமிழகத்தில் போதிய அளவுக்கு ஆக்சிஜன் உள்ளதா..? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தமிழக அரசின் விளக்கத்தை கேட்டு தெரிவிக்குமாறு அரசு தலைமை வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தல்.