ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் – ரூ.135 கோடி ஒதுக்கீடு

தமிழக அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கு கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட பணிக்கு ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செயயப்பட்டுள்ளது. எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.65 கோடி, மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் ஆரம்ப கொரோனா காலத்தில் கொரோனா சிறப்பு வார்டுகளை ஒப்பந்ததாரர்கள் அமைத்து கொடுத்தனர்.

ஆனால், வார்டுகளை அமைத்த ஒப்பந்தரர்களுக்கு ரூ.135 கோடி வழங்கவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை கடிதம் எழுதியது. இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக, அனைத்து மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரிப்பால், கூடுதலாக படுக்கைகள் அமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

எனவே, கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கும் பணி மேற்கொண்டதற்காக ரூ.135.41 கோடியை தமிழக அரசு விடுவித்துள்ளது. அதில், கொரோனா சிறப்பு வார்டுக்காக ரூ.135.419 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்