18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி இலவசம்…..! உ.பி அரசு அதிரடி…!
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும், இதன் மூலம் கொரோனா தோல்வி அடையும், இந்தியா வெல்லும் என்றும் பதிவிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் இந்த அறிவிப்பு நாட்டில் தடுப்பூசி போடும் நடவடிக்கையை மேலும் அதிகரிக்க உதவும் என்றும், கொரோனா வைரஸ் பரவல் விரைவாக தடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.