ஒரு டோஸுக்கு ரூ.400 செலுத்துவது யார்? மாநில அரசா அல்லது பயனாளியா? – ப.சிதம்பரம்

Default Image

எதிர்பார்த்தபடி, கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் விலை தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600, மாநில அரசுகளுக்கு ரூ.400 என உயர்த்தி சீரம் நிறுவனம் அறிவித்திருந்தது. ஏற்கனவே, ரூ.250-க்கு கோவிஷீல்டு தடுப்பூசி விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் விலை இருமடங்காக உயர்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 18 முதல் 44 வயதுக்குட்பட்ட எத்தனை நபர்கள் ஒரு டோஸுக்கு ரூ.400 செலுத்த முடியும்? பயனாளிக்கு செலவில் சுமை ஏற்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தடுப்பூசியின் விலையை செலுத்தவும், மக்களுக்கு மானியம் வழங்கவும் எத்தனை மாநிலங்கள் தயாராக இருக்கும்? என்றும் எதிர்பார்த்தபடி, கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் ஒரு டோஸுக்கு ரூ.400 செலுத்துவது யார்? மாநில அரசா அல்லது பயனாளியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்