லத்தியுடன் ரோந்து பணியில் அசத்தும் 5 மாத கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா!
ஐந்து மாத கர்ப்பிணி சத்தீஷ்கர் மாநில டிஎஸ்பி ஷில்பா கொரோனா ஊரடங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
நாடு முழுவதிலும் கொரோன வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் டிஎஸ்பியாக பணியாற்றக்கூடிய போலீஸ் அதிகாரி ஷில்பா. இவர் தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இருந்தாலும் கொரோனா ஊரடங்கு விதிகளை பின்பற்றுமாறு வாகன சோதனையில் இவர் ஈடுபட்டுள்ளார். கொளுத்தும் வெயிலையும் பாராமல் கடமையுணர்வுடன் இவர் செயல்படுகிறார்.
மாவோயிஸ்டுகள் தாக்குதல் அதிகம் உள்ள பகுதியாகிய தண்டவாடா பகுதியில் லத்தியுடன் சுட்டெரிக்கும் வெயிலில் டிஎஸ்பி ஷில்பா பணி செய்து வருகிறார். ஊரடங்கு விதிகளை கடைபிடிக்காமல் வருபவர்களுக்கு அறிவுரையும் கூறுகிறார். ஊரடங்கு விதிகளை மக்கள் முறையாக கடைபிடித்தால் தான் னாய் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ள ஷில்பா, அதனால் தான் சிரமம் பார்க்காமல் தனது கர்ப்ப காலத்திலும் பணியாற்றுவதாக கூறியுள்ளார்.