வாக்கு எண்ணிக்கை – தலைமை தேர்தல் அதிகாரி தீவிர ஆலோசனை!!
தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மேசைகளை அமைப்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை மே 2ம் தேதி எண்ண இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். வாக்கு எண்ணும்போது தொகுதிக்கு எத்தனை மேசைகளை அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் காணொலி மூலம் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை முடிந்த பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.