கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து கமீலா நாசர் ராஜினாமா!

Default Image

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகர் நாசர் அவர்களின் மனைவி கமீலா நாசர் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் கமலஹாசன் அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்ட கட்சி தான் மக்கள் நீதி மய்யம். இந்த கட்சியில் பல்வேறு திரையுலக பிரபலங்களும், சமூகப் பணியாளர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர், சினேகன், நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் கட்சியில் உள்ளனர். தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கவிஞர் சினேகன், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் தேர்தலில் வேட்பாளராக களமிறக்கப்பட்டனர். நடிகர் நாசர் அவர்களின் மனைவி கமீலா நாசர் அவர்கள் சென்னை மண்டலத்தில் மாநிலச் செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார்.

தற்பொழுது இவர் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளாராம். இது குறித்து மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நமது கட்சியின் சென்னை மண்டல மாநில செயலாளர் திருமதி கமீலா நாசர் அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களால் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார் எனவும், 20-04-2021 முதல் அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை இதன் மூலம் தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம் என கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபு அவர்கள் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.mnm

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்