முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.10,000 அபராதம்…! உ.பி அரசு அதிரடி…!
முகக்கவசம் அணியாமல் முதல்முறை விதியை மீறினால், ரூ.1,000 அபராதமும், தொடர்ந்து வீதியை மீறினால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 1.50 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில், உத்திரபிரதேசத்திலும், கொரோனா தொற்று அதிகரித்து வருகிற நிலையில், உத்திர பிரதேச அரசு சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. அந்த வகையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிற நிலையில், முகக்கவசம் அணியாமல் முதல்முறை விதியை மீறினால், ரூ.1,000 அபராதமும், தொடர்ந்து வீதியை மீறினால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் எச்சில் துப்பினால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.