பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி நிறுவனர்களுடன் இன்று ஆலோசனை…!

பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி நிறுவனர்களுடன் இன்று ஆலோசனை. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் தனது தீவிர ஆட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், இந்தியாவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், தற்போது சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று பிரபல மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் உடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரிப்பது, மூலப் பொருட்களின் தேவை உள்ளிட்ட  விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.