இரவு நேர ஊரடங்கு…! ரயில்களுக்கு பொருந்தாது…!

தமிழகத்தில் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரவு நேர ரயில் சேவை திட்டமிட்டபடி இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழகத்தில் இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரவு நேர ரயில் சேவை திட்டமிட்டபடி இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும், 27 ரயில்களும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 45 ரயில்களும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் அனைத்து இருக்கைகளும் நிரம்பிய வண்ணம் தான் செல்கிறது. வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் இருக்கைகள் நிரம்பிய வண்ணம் செல்கின்ற நிலையில், தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் அதிகமான இருக்கைகள் காலியாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025