தமிழகத்தில் இன்று முதல் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் முழு விவரம் இதோ !
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.இந்த ஊரடங்கானது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலை கொரோனாவை விட தற்போது இரண்டாவது அலை கொரோனா காரணமாக நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் நாள் ஒன்றுக்கு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்த வருகிறது.இதன் காரணமாக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முதல் இரவு 10 மணி அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்ப்படுப்படுகிறது. மேலும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து, பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.
முழு விவரங்கள்:
- தேநீர் கடைகள், உணவு விடுதிகள், வணிக வளாகங்கள், காய்கறி, பலசரக்கு உள்ளிட்டு அனைத்து கடைகளுக்கும் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
- பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
- Swiggy, Zomato போன்ற மின் வணிகம் (e-commerce) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகின்றது. மற்ற மின் வணிக (e-commerce) நிறுவனங்களின் சேவைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
- ஊடகம் பத்திரிகை துறையினர் தொடரந்து இரவிலும் செயல்படலாம்.பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்
-
புதிதாக கும்பாபிஷேகம், திருவிழாக்கள் நடத்துவதை தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.எனினும் ஏற்கனவே ஏற்பாடு செய்ப்பட்டிருந்த நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளவும், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
- தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் கொரோனா வைரசால் புதிதாக 10,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.