#BREAKING: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா உறுதி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா உறுதி செய்யபப்ட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டி வருகிறது.
இதைத்தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இன்று மட்டும் 2.73 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.