இந்த மாதம் மேஷராசிக்கு எப்படி இருக்கு
மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் மேஷராசி அன்பர்களே!
இந்த மாதம் குருபகவான் தொடர்ந்து நன்மையே தருகிறார் சுக்கீரன் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நல்லதையே செய்கிறார்.சூரியனால் வீண் அலைச்சலும் சோர்வும் ஏற்பட கூடும் குருவால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்
இம்மாதத்தில் பொருள் வளம் சேரும் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும் இம்மாதத்தில் விருந்து,விழாவிற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.உறவினர் வழியில் சற்று தள்ளி இருப்பது நல்லது தற்போது புதிய வியாபாரத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்ல விளைவை தரும்.
அரசின் சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது சிலர் அந்நிய தேசம் செல்ல வாய்ப்பும் இருக்கு கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம்,அரசின் விருது,பாராட்டு கிடைக்கும். பெண்களுக்கு சகோதர்களின் ஆதரவு கிடைக்கும் பிள்ளைகளின் நற்செயலால் பெருமை தேடி வரும் நேரம் அதிர்ஷ்டவசமாக பணம் கிடைக்கும் முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது
அதிஷ்ட எண்கள் : 3,5 நிறம் : மஞ்சள்,வெள்ளை
பரிகாரம் : செவ்வாய் கிழமை முருகனுக்கு அர்ச்சனை செய்வது , தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்வது நல்லபலனை தரும்.