உத்தரகாண்டில் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கொரோனா நோயாளிகள்…!

Default Image

உத்திரபிரதேசத்தில், மருத்துவமனையில், சிகிச்சைபெற்று வந்த 20 கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம். 

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் வெளிமாநிலங்களில் இருந்து பலர் லட்சக்கணக்கில் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும், சாதுக்களுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று  உறுதிசெய்யப்பட்ட நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கும்பமேளா நிகழ்வை விரைவில் முடித்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட 38 பேர், உத்திரப்பிரதேச மாநிலம்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.  அவர்களில் 20 பேர் திடீரென காணாமல் போயுள்ளதாக மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, காணாமல் போனவர்கள் மீது பேரிடர் மேலாண்மை மற்றும் தொற்று நோய் பரவும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காணாமல் போனவர்கள், விரைவில் கண்டுபிடிக்கப்படுவர் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா நோயாளிகள் காணாமல் போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்