#BREAKING: டாஸ்மாக் கடைகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள் அறிவிப்பு..!

Default Image

டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் கடையின் உள்ளே 5 பேருக்கு மேல் இருக்கக் கூடாது போன்ற  கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அதிகரித்து வருவதால் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் பகல் 12 மணிக்கு திறக்கப்படும் எனவும் இரவு 9 மணிக்கே மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அன்று டாஸ்மாக் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு வழிக்காட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மதுபான சில்லறை விற்பனை கடைகளில் எந்த ஒரு கூட்ட நெரிசலும் இருக்கக்கூடாது.
  • இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே குறைந்தது ஆறு அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • ஒரே நேரத்தில் கடையில் உள்ள ஐந்து நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது.
  • அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் மேற்பார்வையாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • கடை பணியாளர்கள் மூன்றடுக்கு முகமூடி, முகக் கவசம், கையுறை மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினி திரவத்தை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.
  • கடையை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் கடை பணியாளர்கள் வேலை நேரத்தில் கிருமி நாசினி திரவத்தை குறைந்தது ஐந்து தடவை குறிப்பிட்ட கால இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்.
  • ஒரு நாளைக்கு இரண்டு முறை கிருமி நாசினி திரவத்தை கொண்டு கடை சுத்தம் செய்வதுடன் கடையை சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தம் செய்ய வேண்டும்.
  • குறைந்தது இரண்டு பணியாளர்கள் கடையின் முன்புறம் நின்று மதுப்பிரியர்களை  சமூக இடைவெளி பின்பற்ற வரச்செய்தும், முகக்கவசம் அணிந்து வரச்செய்தும் விற்பனை பணியை மேற்கொள்ள வேண்டும்.
  • கடை பணியாளர்கள் மதுப்பிரியர்களை கடையின் அருகில் மது அருந்த அனுமதிக்காமலும் ,கடையில் அதிக கூட்டம் சேராமலும், பொது இடங்களில் மது அருந்துவதை தடை செய்தும் பணி புரிதல் வேண்டும்.
  • முகக் கவசத்தை அணிந்து வரும் மதுபிரியர்களுக்கு மட்டும் மது வகைகளை விற்பனை செய்ய வேண்டும்.
  • குறைந்தது 50 வட்டங்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது பொருட்டு கடையில் எதிரே வரையபட்டிருக்க வேண்டும்.
  • விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களின் பார்வையில் படும்படி தொங்கவிடப்பட்டு இருக்க வேண்டும்.
  • 21 வயது நிரம்ப பெறாதவர்களுக்கு கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்தல் கூடாது.
  • எக்காரணம் கொண்டும் மதுபானங்கள் மொத்த விற்பனை செய்தல் கூடாது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்