#Breaking: இனி அரசு பேருந்துகள் பகலில் இயக்கப்படும்.. போக்குவரத்துத்துறை அதிரடி!

Default Image

தமிழகத்தில் இரவு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு விரைவு பேருந்துகள் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கு கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள், நாளை முதல் அமலுக்கு வந்து, ஏப்ரல் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இந்நிலையில், இரவு ஊரடங்கு காரணமாக அரசு போக்குவரத்துக்கு கழக பேருந்துகள் பகலில் இயங்கும் என்று போக்குவரத்துக்கழகம் தெரிவித்தது.

அந்தவகையில், தமிழகத்தில் நாளை முதல் அதிகாலை 4 மணிக்கு பேருந்து போக்குவரத்து தொடங்கி, இரவு 8 மணிக்குள் பேருந்துகள் சென்றடையும் வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், விரைவு பேருந்துகளில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள், தங்களின் பயணத்தேதியை மாற்றிக்கொள்ளலாம் எனவும், மாற்று பயண தேதிக்கு பதில் பேருந்து முன்பதிவு கட்டணம் வழங்கப்படும் என்று போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படாது என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்