அதிகரிக்கும் கொரோனா.., அடுத்த மூன்று வாரங்கள் மிக முக்கியமானவை- ராகேஷ் மிஸ்ரா ..!
அடுத்த மூன்று வாரங்கள் இந்தியாவுக்கு மிக முக்கியமானவை என்று சி.எஸ்.ஐ.ஆர்-சி.சி.எம்.பி இயக்குனர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா நேற்று தெரிவித்தார்.
இந்தியாவில் அடுத்த 3 வாரங்கள் நோய்த்தொற்று கொரோனா பரவுவதைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானவை. மக்கள் மிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று ராகேஷ் மிஸ்ரா கூறினார். கொரோனா நோயால் பாதிக்கப்படுவதைத் தடுக்க மக்கள் அரசு வழிகாட்டுதல்களை மிகவும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் தடுப்பூசிகளின் பற்றாக்குறை குறித்து டாக்டர் மிஸ்ரா கூறுகையில், ஆக்ஸிஜன் சிலிண்டர், தடுப்பூசி பற்றாக்குறை நிலைமை தொடர்ந்தால் பேரழிவு தரும் நிலையில்ஏற்படும். இத்தாலியில் இந்த வகையான நிலைமையை நாங்கள் பார்த்தோம். அங்கு சிகிச்சை மருந்து மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் மருத்துவமனைகளின் தாழ்வாரங்களில் பலர் உயிரிழந்தனர்என்று அவர் கூறினார்.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா குறித்து பேசிய டாக்டர் மிஸ்ரா, இரண்டாவது அலை மிகவும் ஆபத்தானது என்று கூறினார். கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காவிட்டால் இந்தியாவில் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் முகக்கவசங்களை அணியாமல் கொரோனா முற்றிலுமாக போய்விட்டது என்று நினைப்பதே நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருவதற்கான காரணம் என்று அவர் கூறினார்.