DC vs PBKS : அரைசதம் விளாசிய ராகுல், மயங்க்.., டெல்லிக்கு 196 ரன் இலக்கு..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தனர்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, பஞ்சாப் அணியில் கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் தொடக்க வீரராக களம் இறங்கினார். இவர்கள் இருவருமே ஆட்டம் தொடக்கத்திலிருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடி வந்த இருவரும் அரைசதம் விளாசினார்.
இவர்களின் கூட்டணி பிடிக்க முடியாமல் டெல்லி அணி திணறியது கூட்டணியில் 122 ரன்கள் எடுத்தனர். நிதானமாக விளையாடி வந்த மயங்க் அகர்வால் 69 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் கே.எல் ராகுல் 61 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கிய கிறிஸ் கெயில் 11 ரன் எடுத்து வெளியேறினார்.
இலக்க மத்தியில் களம் கண்ட நிக்கோலஸ் பூரன் 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கிய தீபக் ஹூடா 22*, ஷாரு கான் 15* ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்றனர். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தனர். 195 ரன்களுடன் டெல்லி அணி களமிறங்கவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024![Lokesh Kanagaraj Production Mr Bhaarath Movie promo](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Lokesh-Kanagaraj-Production-Mr-Bhaarath-Movie-promo.webp)
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024![Union Minister Amit shah](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Union-Minister-Amit-shah-5.webp)