நிர்மலா தேவி விவகாரம் குறித்து நாளை அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் விசாரணை!
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் ,நிர்மலா தேவி விவகாரம் குறித்து நாளை அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்த வழக்கு குறித்து விசாரிக்க ஆளுநரால் நியமிக்கப்பட்டவர் இவர். விசாரணையை தொடங்குவதற்காக இன்று, மதுரை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இன்று மாலை அருப்புக் கோட்டை செல்ல உள்ளதாக சந்தானம் கூறியுள்ளார்.மேலும் மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 நாள் விசாரணை நடத்த உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.