#IPL2021: “நான் மிகவும் வயதாகி விட்டதாக உணர்கிறேன்”- தல தோனி ஓபன் டாக்!
இது ஒரு நீண்ட பயணம் என்றும், நான் மிகவும் வயதாகி விட்டதாக உணர்வதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த 2008-ம் ஆண்டு முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பதவி வகிப்பவர், தல தோனி. இவர் 2020-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். அவர் ஓய்வு பெரும் செய்தி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரின் விளையாட்டை இனி ஐபிஎல் தொடரில் மட்டுமே காணமுடியும் என்று ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் 39 வயதாகும் தல தோனி, சென்னை அணிக்காக மிகச் சிறந்த கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோனி தனது 200-வது போட்டியில் விளையாடினார். அப்பொழுது பேசிய அவர், “இது ஒரு நீண்ட பயணம்.. நான் மிகவும் வயதாகி விட்டதாக உணர்கிறேன்” என்று கூறினார்.
மேலும், கடந்த 2008-ம் ஆண்டில் தொடங்கிய இந்த பயணம், மிக நீண்ட பயணம் என்று குறிப்பிட்ட தோனி, 200-வது போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் விளையாடுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று கூறினார். அதுமட்டுமின்றி, தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்- ஐ இந்தாண்டி ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் உட்பட அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.