#RCBvKKR: மேக்ஸ்வெல்-டி வில்லிர்ஸ் பேயாட்டம்.. கொல்கத்தா அணிக்கு 205 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல்-டி வில்லிர்ஸ்-ன் அதிரடி ஆட்டத்தால் பெண்களின் அணி 204 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 10-ம் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – படிக்கல் களமிறங்கினார்கள். இதில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து கோலி தனது விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய பட்டிதார் 1 ரன் மட்டுமே எடுக்க, அவரைதொடர்ந்து மேக்ஸ்வெல் களமிறங்கி அதிரடியாக ஆடத் தொடங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய படிக்கல் 25 ரன்களில் வெளியேற, டி வில்லிர்ஸ் களமிறங்கினார். அவர் மேக்ஸ்வெலுடன் இணைந்து ஆட, இருவரின் கூட்டணியில் அணியின் ஸ்கொர் உயரத் தொடங்கியது. 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து விரைவில் அரைசதம் எடுத்தோர் பட்டியலில் இணைந்தார், மேக்ஸ்வெல்.
49 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து மேக்ஸ்வெல் வெளியேறினார். இதில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும். அவரைதொடர்ந்து ஜேமிசன் களமிறங்க, டி வில்லிர்ஸ் பேயாட்டம் ஆடத் தொடங்கினார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 204 ரன்கள் அடித்தது. இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 49 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும். டி வில்லிர்ஸ் 34 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். இதில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கும். 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது கொல்கத்தா களமிறங்கவுள்ளது.