இமயமலை (திருக்கயிலாய) பாதயாத்திரை முன்பதிவு…!
திருக்கயிலாய மலை அல்லது கைலாசம் என்பது இமயமலைத் தொடரில் உள்ள ஒரு புகழ் பெற்ற சிகரம் ஆகும். இது கடல்மட்டத்திலிருந்து 6,638 மீ உயரத்தில் அமைந்துள்ளது.இந்த
திருக்கயிலாய மலை இந்துக்கள், போன்கள், திபெத்தியர்கள் மற்றும் சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது.இதனால்,பக்தர்கள் இங்கு புனித யாத்திரை சென்று வருவது வழக்கம்.
அதன்படி,’வாருங்கள் புனித யாத்திரைக்கு’ என்ற ஒரு அமைப்புக் குழு,2022 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதியன்று சென்னையிலிருந்து 4 மாத பயணமாக திருக்கயிலாய பாத யாத்திரை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த யாத்திரையில்,தமிழகத்தில் இருந்து சுமார் 300க்கும் அதிகமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.
சென்னையிலிருந்து புறப்பட்டு விமானம் மூலம் டெல்லி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து,டெல்லியில் மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு,பாதயாத்திரையாக உத்தரகாண்ட் சென்று அங்கிருந்து ஆதி கைலாஷ் மற்றும் ஓம் பர்வத் கைலாஷ் வழியாக இமயமலை உள்ள கைலாஷ் மானசரோவரை அடைய திட்டம் போடப்பட்டுள்ளது.
இந்த திருக்கயிலாய பாத யாத்திரையில் கலந்து கொள்ள விரும்புவோர்,புகைப்படம்,ஆதார் மற்றும் பாஸ்போர்ட் ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
தங்குமிடம்,உணவு,மருத்துவப் பரிசோதனை ஆகியவை அமைப்பின் சார்பில் கொடுக்கப்படும் என்றும்,ஆனால்,விசா கட்டணம்,இதர செலவுகள் எல்லாம் அவரவர் கொண்டு வர வேண்டும் என்றும்,மேலும்,சந்தேகங்களுக்கு 9444500309 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் யாத்திரை அமைப்புக் குழு அறிவித்துள்ளது.