அமெரிக்காவில் ‘லா டூ சான்’ வரை 400 கீமி நடந்து வந்த கரடி பொம்மை…!

Default Image

அமெரிக்காவில் உள்ள ஒரு நபர் கரடி பொம்மை உடையில் ‘லாஸ் ஏஞ்செல்ஸ்லிருந்து  சான் பிரான்சிஸ்கோ’ வரை 400 கி.மீ. நடந்தே சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் வசிக்கும் ஜெஸ்ஸி லாரியோஸ் என்ற 33 வயது இளைஞர் ஒருவர் ‘பியர்சன்’ என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். ஏனெனில்,2019ஆம் ஆண்டில் நடைபெற்ற மாரத்தானில் கரடி பொம்மை உடையுடன் அவர் கலந்து கொண்டார்.லாரியோஸ்,அந்த கரடி பொம்மை உடையை தனது சொந்த முயற்சியினால் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜெஸ்ஸி லாரியோஸ்,இந்த கரடி பொம்மை உடையணிந்து லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சான் பிரான்சிஸ்கோ வரை 400 கி.மீ. நடந்தே பயணம் செய்து வருகிறார்.வியாழக்கிழமை நிலவரப்படி,160 கிலோமீட்டர் தூரத்தை லாரியோஸ் கடந்துள்ளார்.

சான் பிரான்சிஸ்கோ வரை நடப்பது பற்றி லாரியோஸ் கூறுகையில், தனக்கு மற்றொரு கரடி பொம்மை உடை தேவைப்படுவதால்,இந்த நடைபயணம் மேற்கொண்டுள்ளதாகவும்,அதற்காக,மக்கள் நன்கொடை தந்து உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளார்.மேலும் மக்கள்,தனக்கு பணம் அனுப்புவதற்காக ஒரு ‘ கோ ஃபவுண்ட் மீ ‘ (Go Fund Me) என்ற பக்கத்தை சமூக வலைதளத்தில் உருவாக்கியுள்ளார்.தனக்கு கரடி பொம்மை உடை  வாங்கிய பிறகு மீதமுள்ள தொகையை ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.எனவே, லாரியோஸிற்கு பலரும் நிதி அளித்து வருகின்றனர்.

இதனால் லாரியோஸ்,சமூக ஊடகங்களின் மூலம் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்