என் வாழ்நாளின் பேரிழப்பு – விக்னேஷ் சிவன்..!!

என் வாழ்நாளின் பேரிழப்பு என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
காமெடி நடிகர் விவேக் நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதில், “சமூக சீர்திருத்த கருத்துக்களை அழுத்தமாக பேசிய குரல் இனி நம்மிடையே இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது. விஐபி பட நாட்களில் உங்களுடன் பழகிய நினைவுகள் நீங்கள் நட்ட மரங்களை போல் என்றும் என் மனதில் பசுமையாக இருக்கும். நாம் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறோம் ஆனால் அது இறுதிவரை நிறைவேறாமல் போனது என் வாழ்நாளின் பேரிழப்பு” இளைப்பாறுங்கள் சின்னக் கலைவாணரே” என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இளைப்பாறுங்கள் சின்னக் கலைவாணரே …. ???????????? #RIPVivekSir pic.twitter.com/DTIsIQVDmQ
— Vignesh Shivan (@VigneshShivN) April 17, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025