#BigBreaking: நடிகர் விவேக் காலமானார்
சென்னை: மாரடைப்பு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று காலமானார்.அவருக்கு வயது 59.
விவேக் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்ததால், தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
முதலில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனைத்தொடர்ந்து இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டை சரி செய்ய ‘எக்மோ’ கருவியும் பொருத்தப்பட்டு சிகிச்சையானது அளிக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.விவேக்கின் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.