+2 மற்றும் அனைத்து கல்லூரி தேர்வுகளையும் ஒத்திவைக்க வேண்டும் -சீமான்..!

பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் மற்றும் அனைத்து கல்லூரி தேர்வுகளையும் ஒத்திவைக்க தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி வருகிறது. நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 2 லட்சத்தை தாண்டியது. இதன் காரணமாக பல முக்கிய மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மத்திய, மாநில அரசுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த சில நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் இல்லாமல் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் ரஞ்சன் ராஜீவ் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
கொரோனோ பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் நிலையில், விரைவில் நடைபெறவுள்ள பன்னிரண்டாம் வகுப்புத் பொதுத்தேர்வுகள் குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அச்சத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
(1/3)
— சீமான் (@SeemanOfficial) April 16, 2021
எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் மற்றும் அனைத்து கல்லூரி தேர்வுகளையும் ஒத்திவைக்க தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.@CMOTamilNadu
— சீமான் (@SeemanOfficial) April 16, 2021
இதற்கிடையில், கொரோனோவை கட்டுப்படுத்த 14 நாட்கள் முழு உரடங்கிற்கு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள பதிவில் கொரோனோ பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் நிலையில், விரைவில் நடைபெறவுள்ள பன்னிரண்டாம் வகுப்புத் பொதுத்தேர்வுகள் குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அச்சத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனோ பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் முழுப் பொது முடக்கத்திற்கு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் மற்றும் அனைத்து கல்லூரி தேர்வுகளையும் ஒத்திவைக்க தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
லக்னோ அணிக்கு அதிர்ச்சி…ஐபிஎல் போட்டிகளை மிஸ் பண்ணப்போகும் மயங்க் யாதவ்! இது தான் காரணமா?
March 11, 2025
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு… இன்றைய நிலவரம் இதோ.!
March 11, 2025
நோட்டீஸ் அனுப்பிய கனிமொழி..தர்மேந்திர பிரதானின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்!
March 11, 2025