மிவி காலர் இயர்போன்ஸ்(mivi colour earphone) பற்றிய சில தகவல்கள்..!

Default Image

நம் அன்றாட வாழ்க்கை பயணத்தை மிகவும் எளிதான நிலைக்கு வயர்லெஸ் இயர்போன்கள் எடுத்து சென்றுள்ளன. வயர் கொண்ட ஹெட்போன்களோடு, இந்த வயர் இல்லாத ஆடியோ சாதனங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, வயர்கள் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்குள் முடங்கிவிட்ட நம் அன்றாட வாழ்க்கை பணிகளை, வயர்லெஸ் மூலம் விரிவுப்படுத்த முடிகிறது. இந்நிலையில், ஒருவர் வயர்லெஸ் இயர்போன்களை வாங்கும் போது, அதன் ஆடியோ தரம், மொத்த எடை மற்றும் தயாரிப்பின் விலை ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

 

உள்நாட்டு சந்தையைச் சேர்ந்த வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு பிராண்ட்டான மிவி, இசை விரும்பிகளுக்காக ‘காலர்’ என்ற தனது முதல் ப்ளூடூத் நெக்பேண்டு இயர்போனை சமீபத்தில் அறிவித்தது. இந்த வயர்லெஸ் சாதனம் குறைந்த எடைக் கொண்டதாகவும், ஹெச்டி-ஸ்டீரியோ சவுண்டு மற்றும் செயலற்ற சத்தத்தைத் தவிர்ப்பது ஆகியவற்றை கொண்டுள்ளது. Mivi.in, Amazon.in, பிளிப்கார்ட் மற்றும் பேடிஎம் ஆகியவற்றில் கிடைக்கப்பெறும் இந்த நெக்பேண்டிற்கு ரூ.2,999 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வலிமையான மற்றும் எடைக் குறைந்தது மிவி காலர் என்பது தரமான பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு எடைக் குறைந்த ப்ளூடூத் ஹெட்செட் ஆகும். ஒரு சுமூகமான நெக்பேண்டு வடிவமைப்பைக் கொண்ட இந்த ஆடியோ உதிரிப் பாகத்தை, நாள் முழுவதும் அணிந்து கொள்ள மிகவும் வசதியாக உள்ளது. பல மணிநேரங்களாக அணிந்திருந்தாலும், எடைக் குறைவாக இருப்பதால் அணிந்திருப்பது போன்ற உணர்வே ஏற்படுவதில்லை. இந்த நெக்பேண்டுஐ குறித்த மற்றொரு சிறப்பு என்னவென்றால், நாள் முழுவதும் வழக்கமான பணிகளுக்கு இடையில் இதை அணிந்து கொள்ள முடிகிறது. மிவி காலர் நெக்பேண்டின் இடதுபக்கத்தில், ஒலியளவு கட்டுப்படுத்தும் பொத்தான்களும், வலதுபக்கத்தில் பவர் கீ மற்றும் சார்ஜிங் ஸ்லாட்டும் உள்ளன. மிவி காலர்களில் சார்ஜ் செய்வதற்கான ஒரு மைக்ரோயூஎஸ்பி ஸ்லாட் காணப்படுகிறது.

இயர்போன்களின் முனைகளில் மேக்னேட்கள் இருப்பதால், பயன்பாட்டில் இல்லாத போது கழுத்திலேயே ஹெட்போன்களை வைத்திருக்க உதவுகின்றன. இதில் உள்ள மேக்னேட்டிக் லாக் என்ற ஒரு அம்சம் மூலம் நாம் பயணத்தில் இருந்தால் கூட, அவை தவறி கீழே விழுவதில்லை. மேலும் நெக்பேண்டில் கூட மேக்னேட்டிக் ஸ்லாட்கள் இருப்பதால், பயன்பாட்டில் இல்லாத போது இயர்பீஸ்களை வைத்து கொள்ள முடிகிறது. அம்சங்களும் சிறப்புத் தன்மைகளும் மிவி காலரில் ப்ளூடூத் பதிப்பு 4.1 காணப்பட்டு, 30 அடி தூரம் வரை இணைப்பை வழங்குகிறது. மேலும் ஒரே நேரத்தில் மிவி நெக்பேண்டு உடன் ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்களை இணைக்க முடியும்.

தொழில்நுட்ப ரீதியாக பார்க்கும் போது, 16 ஓஹெச்எம்எஸ் மின் தடுப்பு மற்றும் 20ஹெச்இசட் முதல் 20 கேஹெச்இசட் வரையிலான அதிர்வெண் வரம்பில் செயல்பட்டு, இயர்போன்கள் சத்தமான ஆடியோவை வெளியிட உதவுகின்றன. இந்த இயர்போன்கள் 104 டிபி+/-3 உணர்வுத்திறன் மற்றும் வெறும் 30 கிராம் எடை கொண்டதாக இருப்பதால், எடுத்து செல்ல எளிதாகவும் நீண்டநேரத்திற்கு அணிந்துள்ள எதுவாகவும் இருக்கிறது

. செயல்பாடு: சத்தமான மற்றும் தெளிவான ஆடியோ மிவியை நீண்டநேரம் சோதித்து பார்த்த போது, ஒட்டுமொத்தத்தில் சரிசமமான செயல்பாட்டை பெற முடிந்தது. இதில் முதலாவதாக, ஹெட்போன்கள் சத்தமான ஒலியை வெளியிடுகிறது என்றாலும், பாஸ் வெளியீடு கிடைக்கவில்லை. ஆனால் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக பயன்படுத்திய போது, இந்த இயர்போன்களில் இருந்து கச்சிதமான பாஸ் வெளியீடு கிடைத்தது.

ஆடியோவில் ஏற்படும் உயர்வுகள், தாழ்வுகள் மற்றும் நடுத்தர அதிர்வு வேறுபாடுகளைச் சரிசமமாக பிரித்தறிய முடிகிறது. இதன்மூலம் கூட்டிணைப்புகள், கம்பி கருவிகள், தட்டும் கருவிகள் மற்றும் காற்று கருவிகள் உள்ளிட்ட எந்த மாதிரியான ஆடியோ தளங்களாக இருந்தாலும், சிறப்பாக டியூனிங் செய்வதற்கு ஏற்ற ஒரு சிறந்த ஆடியோ உதிரி பாகமாக நெக்பேண்டு செயல்படுகிறது.

ஆடியோ சத்தமாகவும் தெளிவாகவும் அளிக்கப்படுவதால், ஒவ்வொரு தனிப்பட்ட துடிப்புகளும் தெளிவாகக் கேட்க முடிகிறது. மிவியில் பயன்படுத்தப்படும் சிவிசி 6.0 செயலற்ற சத்தம் தவிர்க்கும் செயல்பாடு, மிகச் சிறப்பாகச் செயல்பட உதவுகிறது. இயர்போன்கள் 60 அல்லது 70% ஒலிஅளவை வைத்தால் கூட, வெளிப்புறத்தில் இருந்து வரும் சத்தத்தைத் தடுத்து நிறுத்தி, தனது மீடியாவை சந்தோஷமாக ரசிக்க பயனருக்கு உதவுகிறது.

மேலும் இயர்போன்களின் அழைப்பு சத்தத்தின் தரம் கூட சிறப்பாக உள்ளது. ஒரு அழைப்பை ஏற்கும் போது, எந்த மாதிரியான பிரச்சனையையும் நான் எதிர்கொள்ளவில்லை. முடிவு மிவி காலர் நெக்பேண்டில், செயல்பாடு மற்றும் அம்சங்களின் ஒரு சிறந்த கலவையைக் காண முடிகிறது. சத்தமாக மற்றும் தெளிவான ஆடியோ கிடைப்பதோடு, எடைக் குறைந்த வடிவமைப்பு மூலம் தினமும் பயன்படுத்துவதற்கு ஏற்ற ஒரு சிறந்த வயர்லெஸ் ஆடியோ உதிரிப் பாகமாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records