சிபிஐ முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹா கொரோனாவால் உயிரிழப்பு..!

Default Image

சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்கா கொரோனா காரணமாக உயிரிழந்தார்.

சிபிஐ முன்னாள் தலைவர் ரஞ்சித் சின்ஹா கொரோனா காரணமாக உயிரிழந்தார். 1974 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான ரஞ்சித் சின்ஹா ​​இன்று அதிகாலை 4.30 மணியளவில் டெல்லியில் உயிரிழந்தார். ரஞ்சித் சின்ஹா பல்வேறு மூத்த பதவிகளை வகித்தார்.

ரஞ்சித் சிங் 1974-ல் ஐபிஎஸ் அதிகாரியாகவும், சிபிஐ இயக்குநராக வருவதற்கு முன்பு பல முக்கியமான பதவிகளை வகித்திருந்தார். அவர் இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை (ஐடிபிபி) இயக்குநராக இருந்தார். 22 நவம்பர் 2012 அன்று, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார். முன்னதாக, ரயில்வே பாதுகாப்பு படையின் தலைவராக இருந்தார். மேலும், பாட்னா மற்றும் டெல்லி சிபிஐ ஆகியவற்றில் மூத்த பதவிகளில் பணியாற்றினார்.


ரஞ்சித் சின்ஹா முதலில் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் ரஞ்சித் சின்ஹாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்