சென்னை உயர்நீதிமன்றம் டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!
உயர்நீதிமன்றம் ,சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. பிரிட்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 36 லட்சத்து 36 ஆயிரம் அமெரிக்க டாலரும், ஒரு லட்சம் பிரிட்டன் பவுண்டும் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக, 1996ஆம் ஆண்டு மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இதுதவிர, பிரிட்டனில் உள்ள பார்க்லே வங்கியில் ஒரு கோடியே 4 லட்சம் அமெரிக்க டாலர் முதலீடு செய்தது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகளை ஒரே வழக்காக சேர்த்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனுத் தாக்கல் செய்தார். இதனை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி டீக்காராமன், வழக்கு பற்றி வருகிற 9ஆம் தேதிக்குள் பதிலளிக்க, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். அதுவரை, சென்னை எழும்பூர் நீதிமன்றம், தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.