#Breaking : மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்றால் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு…!
மேற்கு வங்கத்தில், முர்ஷிதாபாத் அருகே சம்ஷேர்கஞ்ச் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ரெசால் ஹக் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தற்போது, இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பவரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இந்தியாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வைரஸ் தொற்றால், பிரபாலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். அந்த வகையில், மேற்கு வங்கத்தில், முர்ஷிதாபாத் அருகே சம்ஷேர்கஞ்ச் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ரெசால் ஹக் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.