தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று ரசிகர்களுக்கு தளபதி ட்ரீட் …??

இன்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் இன்று மாலை 06.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
கடந்த வருடம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் இந்த வருடம் திரையரங்குகளில் 50 % இருக்கையாளர்களுடன் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.
இயக்குனர் லோகேஷ் கனரகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு பாக்கியராஜ், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 240 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் தற்போது, இன்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் இன்று மாலை 06.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
கபடி! கபடி!!
தமிழ் புத்தாண்டு மற்றும் சன் டிவி-யின் 28 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு
தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் மாளவிகா மோகனன் நடித்தமாஸ்டர் | ஏப்ரல் 14 | 6.30 PM #SunTV #Master #MasterOnSunTV #VaathiComingToSunTV #WorldTelevisionPremiere pic.twitter.com/E3Dp8vsdAY
— Sun TV (@SunTV) April 14, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025