சாதாரணமா நினைக்காதீங்க…! ஐஸ் கியூப் இதுக்கெல்லாம் கூட யூஸ் ஆகுமாம்…!
நாம் இதுவரை அறிந்திராத பல நன்மைகள் இந்த ஐஸ் கியூபில் உள்ளது.
நாம் ஐஸ் கியூப்பை ஏதாவது ஜூஸ் அல்லது தண்ணீரை குளிர்ச்சியாக மாற்றி குடிக்க தான் பயன்படுத்துவதுண்டு. ஆனால், நாம் இதுவரை அறிந்திராத பல நன்மைகள் இந்த ஐஸ் கியூபில் உள்ளது.
நமது ஆடையில் பபிள் கம் ஒட்டிக்கொண்டால், அதை அகற்றுவதற்கு சிரமப்படுவதுண்டு. அப்படி வேளைகளில், ஒரு ஐஸ் கட்டியை எடுத்து நன்கு அந்த பபிள்கம் ஒட்டியுள்ள பகுதியில் சிறுது நேரம் தேய்க்க வேண்டும். பின் அந்த கட்டியை அந்த பபிள்கம் மீது அப்படியே வைத்து விட வேண்டும். அந்த கட்டி முழுவதும் கரைந்த பின், அந்த பபிள்கம்மை உரித்து எடுக்க எளிதாக இருக்கும்.
நாம் எங்காவது வெளியே செல்வதற்கு முன் நமது முகத்தை ஒரு ஐஸ் கியூப்பை காட்டான் துணியில் சுற்றி மசாஜ் செய்துவிட்டு, அதன் பின் மேக்கப் செய்தால், அது நீண்ட நேரம் கலையாமல் அப்படியே இருக்கும்.
நாம் குழந்தைகளுக்கு பால் கொடுக்க கூடிய பாட்டிலை, சில நேரங்களில் சோப்பு போட்டு கழுவினாலும், அந்த கரை போகாது. அப்படிப்பட்ட சமயங்களில் ஒரு ஐஸ் கியூப்பை உள்ளே போட்டு, சிறுது கல் உப்பு சேர்த்து குலுக்கினால், கரை முழுவதும் போயிவிடும்.