அரக்கோணம் இளைஞர்கள் கொலை.., சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்- திருமாவளவன்..!
அரக்கோணம் இளைஞர்கள் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், அம்பேத்கர் பிறந்தநாளில் சனாதனத்தை வேரறுத்து சமத்துவத்தை நிலைநாட்ட உறுதி ஏற்போம். அரக்கோணம் இளைஞர்கள் கொலை சாதி, அரசியல் பகை நிறைந்த ஒரு மோசமான கொடூரமான படுகொலை. அரக்கோணம் இளைஞர்கள் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரக்கோணம் அருகே உள்ள சோகனூரில் கடந்த 7-ஆம் தேதி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு தலித் இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலும், மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசிக வேட்பாளருக்கு ஆதரவாக பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்ததற்காக இரண்டு தலித் இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கொலைகள் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.