சார்ச்சைக்குரிய ட்வீட் போட்ட ஹெச்.ராஜாவிற்கு எதிராக திமுகவினர் போராட்டம்! ஹெச்.ராஜாவின் உருவ பொம்மை எரிப்பு !
திமுகவினர் கருணாநிதி குறித்து அநாகரிக ட்வீட் போட்ட ஹெச்.ராஜாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக தலைவர் கருணாநிதி அவரது துணைவியார் ராஜாத்தியம்மாள் மற்றும் மகள் கனிமொழி ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார்.
ஹெச்.ராஜாவின் இந்த டிவிட் திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எச் ராஜாவை கண்டித்து திமுக மகளிரணியினர் சென்னை அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஹெச்.ராஜாவின் கொடும்பாவியை எரித்தும் அவரது படத்தை காலணியால் அடித்தும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் சென்னை தாம்பரத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.