#Breaking : அறிகுறி இல்லையென்றாலும், இந்த சோதனையை மேற்கொள்ள வேண்டும் – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
கொரோனாவிற்கான எந்த அறிகுறி இல்லையென்றாலும், ஒரு சிலருக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ளது.
சென்னை தி.நகரில், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், முகர்ந்து பார்க்கும் வாசனை இல்லாமல் இருப்பது, வயிற்று போக்கு, கடுமையான உடற்சோர்வு போன்ற பிரச்னை இருந்தால், அதிகாரிகள் உடனடியாக பதிவு செய்து, அப்படிப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம்.
கொரோனாவிற்கான எந்த அறிகுறி இல்லையென்றாலும், ஒரு சிலருக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு, ஆக்சினேட்டர் கருவியை பயன்படுத்தி சோதனை மேற்கொள்ள வேண்டும். அப்படி சோதனை மேற்கொள்ளும் போது இரத்தத்தில், ஆக்சிஜன் அளவை கண்டுபிடிக்கலாம்.
அந்த கருவி 95-க்கு கீழ் காட்டினால், கொஞ்சம் கவனமாக தான் இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் உள்ள காய்ச்சல் முகாம்களுக்கு சென்று, பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வீடுகள்தோறும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தாலே, தொற்று பாதிப்பின் தீவிரம் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.