தமிழ் மக்களுக்கு சித்திரை தின வாழ்த்துக்கள் தெரிவித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர்…!
தமிழ் மக்களுக்கு சித்திரை தின வாழ்த்துக்களை தெரிவித்த தலைவர்கள்.
இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதுண்டு. புத்தாண்டை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவதுண்டு. ஒவ்வொருவரும் தங்களது வாழ்த்துக்களை பரிமாறி, வீடுகளில் விஷேசமான உணவுகளை செய்து சாப்பிடுவதுண்டு.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டை கொண்டாடும் தமிழ் மக்களுக்கு அரசியல் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், சில தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புத்தாண்டு பிறப்பு நாளில், தமிழ்நாட்டில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் நல் வாழ்த்துகள். இந்த புனித நாள் அனைவருக்கும், நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் வளத்தைக் கொண்டு வரட்டும்.
— President of India (@rashtrapatibhvn) April 14, 2021
Best wishes on the special occasion of Puthandu. pic.twitter.com/naA4BP4guy
— Narendra Modi (@narendramodi) April 14, 2021