கொல்கத்தாவை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி..!
கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இன்று நடைபெற்ற 5-வது ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்தனர்.
மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56, ரோகித் 43 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா அணியில் ரஸ்ஸல் 5, பட் கம்மின்ஸ் 2 , ஷாகிப் அல் ஹசன், பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட்டை பறித்தனர். இதைத் தொடர்ந்து, 153 ரன்கள் என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக நிதீஷ் ராணா, சுப்மான் கில் இருவரும் இறங்கினர்.
இவர்களின் கூட்டணியில் அணியின் எண்ணிக்கை சிறப்பாக உயர்ந்தது.அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராணா அரைசதம் அடித்து 55 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பின்னர், இறங்கிய ராகுல் திரிபாதி 5 , மோர்கன் 7 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனர். நிதானமாக விளையாடிய சுப்மான் கில் 33 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்தடுத்து இறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.