பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரத்துடன், சென்னை மாநகராட்சி சார்பில் நட்புணர்வு ஒப்பந்தம்!
பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் சென்னை மாநகராட்சி இடையே பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. நகர வளர்ச்சி, நகர்ப்புற சவால்கள், பொருளாதார மேம்பாடு, சீர்மிகு நகரங்கள், அவசர காலங்களின்போது எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்களில் இணைந்து செயல்படுவது தொடர்பாக இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்தியாவுக்கான பெல்ஜியம் தூதர் ஜேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.