வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த இசை அரக்கன்…!!
வாடி வாசல் படத்திற்கான இசைப்பணிகளை தொடங்கியதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பை விரைவில் முடித்துவிட்டி இயக்குனர் வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
ஆம் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கவுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. மேலும் இயக்குனர் வெற்றி மாறனும் தற்போது நடிகர் சூரியை வைத்து ஒரு திரைப்படம் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பும் வீரவில் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான அப்டேட் ஒன்றை படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆம் இந்த திரைப்படத்திற்கான இசைப்பணிகளை ஜிவி பிரகாஷ் தொடங்கியுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளார்கள்.
The music work for #VaadiVaasal starts today …. ???? @Suriya_offl @VetriMaaran @theVcreations
— G.V.Prakash Kumar (@gvprakash) April 13, 2021