சித்ரா பவுர்ணமி விழா பேராவூரணி.! நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் 20-ம்தேதி தொடங்குகிறது..!!

Default Image

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் முடப்புளிக்காட்டில் உள்ளது ஏந்தல் அருள்மிகு நீலகண்டப்பிள்ளையார் திருக்கோவில். இந்த கோவிலில் நடக்கும் சித்ரா பவுர்ணமி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவில் திருவிழாவிற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் திரளாக வந்து கலந்து கொண்டு வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள்.

இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 20-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி மே மாதம் 1-ம் தேதி செவ்வாய்கிழமை முடிய 13 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த கோவில் சித்ரா பவுர்ணமி திருவிழா நிகழ்ச்சி

முதல் நாளான 20-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. அன்றைய தினம் இரவு காப்பு கட்டுதல் 10. 30 மணியில் இருந்து 11 மணி அளவிலும் நடைபெறுகிறது.

2-ம் நாள் திருவிழாவில் (21-ம்தேதி) வண்ணமயில் வாகன நிகழ்ச்சியும்,  3-ம் நாள் திருவிழாவில் (22-ம் தேதி) காமதேனு வாகன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 23-ம் தேதி திங்கள் கிழமை பூத வாகன, 24-ம் தேதி அன்ன வாகனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

25-ம் தேதி புதன் கிழமை பிள்ளையார் சர்வ அலங்காரத்தில் மயில் வாகனத்தில் எழுந்தருளி கடைவீதியில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 26-ம் தேதி விழாக்கிழமை ரிஷப வாகனம், 27-ம் தேதி குதிரை வாகனம், 28-ம் தேதி அதிகாலை 4 மணி முதல் பால்குடம், காவடி எடுக்கும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து மாலை 6.30 மணி அளவில் தேரோட்டமும் நடைபெற உள்ளது.

29-ம் தேதி பத்தாம் நாள் திருவிழா நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வாக சித்ரா பவுர்ணமி தீர்த்தம் நிகழ்ச்சி மாலை 6.30 மணி அளவில் நடைபெறுகிறது.  30-ம் தேதி திருக்கல்யாணமும் இரவு தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. மே மாதம் 1-ம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

உற்சவ தினங்களில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், இன்னிசை நிகழ்ச்சி, சமயச்சொற்பொழிவு, வாண வேடிக்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.சித்ரா பவுர்ணமி திருவிழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்