அனைத்து வங்கிகளின் RTGS சேவை 14 மணி நேரம் கிடைக்காது.., ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!
ஞாயிற்றுக்கிழமை ஆர்.டி.ஜி.எஸ் (RTGS- real-time gross settlement ) சேவை 14 மணி நேரம் இயங்காது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை ஆன்லைனில் பணத்தை மாற்றுவதில் சிக்கல் ஏற்படவாய்ப்புகள் அதிகம் உள்ளது. காரணம் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆர்.டி.ஜி.எஸ் (RTGS- real-time gross settlement ) சேவை 14 மணி நேரம் இயங்காது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்.டி.ஜி.எஸ் பண பரிமாற்ற சேவை மூலம் பணம் அனுப்பவோ அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை செய்யவோ முடியாது. ஏப்ரல் 18 ஆம் தேதி, நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆர்டிஜிஎஸ் சேவை இயங்காது. ஆர்.டி.ஜி.எஸ் அமைப்பின் வேகத்தை அதிகரிக்க ஏப்ரல் 18 ஆம் தேதி ஆர்டிஜிஎஸ் தொழில்நுட்ப பணிகள் நடைபெறும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, ஏப்ரல் 17 ஆம் தேதி முடிவடைந்த பின்னர் ஏப்ரல் 18 அன்று 12.01 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆர்டிஜிஎஸ் இயங்காது. இந்த மனதில் வைத்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை தங்கள் பரிவர்த்தனை நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறு ரிசர்வ் வங்கி வடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
ஆர்டிஜிஎஸ் பண பரிமாற்ற சேவை ஞாயிற்றுக்கிழமை செயல்படவில்லை என்றாலும், வாடிக்கையாளர்கள் நெஃப்ட் (NEFT- National Electronic Fund Transfer) மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளை நடத்த முடியும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆன்லைனில் பணத்தை மாற்றுவதில் அல்லது டிஜிட்டல் கட்டணம் செலுத்துவதில் மக்களுக்கு அதிக சிரமம் இருக்காது என கூறப்படுகிறது.