சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? – கமலஹாசன்
சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை.’
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, இரவு 11 மணிக்கு மேல் உணவகங்கள் செயல்பாடாக கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவையில் காந்திபுரத்தில், இரவு 10 மணியளவில் உணவகத்தில் அமர்ந்து சிலர் உணவருந்தியுள்ளனர். இதனை தொடர்ந்து, கடை ஊழியர்கள், பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில், பெண் உட்பட பல காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, கடை ஊழியர்கள், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உரிமையாளர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில், பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஓர் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரைத் தாக்குகிறது. சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை.’ என பதிவிட்டுள்ளார்.
இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக்கூடாது என்பதே அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில், பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஓர் உணவகத்துக்குள் புகுந்து அங்கிருந்தோரைத் தாக்குகிறது. சாத்தான்குளப் படுகொலைகளை நினைவுபடுத்துகிறார்களா? பதிலளிக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை.
— Kamal Haasan (@ikamalhaasan) April 12, 2021