IPL 2018:பெங்களூரு அணி வலுவான அதிரடி அணி,இது வெறும் பேப்பர்ல மட்டும் தானா?கடுப்பான வெட்டோரி

Default Image

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தொடர் தோல்விகளுக்குக் காரணம் அதன் இறுதி ஓவர்களின் ரன் வாரிவழங்கலே என்பதால் கடும் அவதிக்கு  ஆளாகியுள்ளார்.

அன்று ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சஞ்சு சாம்சன் 12 சிக்சர்களைப் புரட்டி எடுத்த போது கடைசி 5 ஓவர்களில் 88 ரன்களை வாரி வழங்கியது பெங்களூரு இதனால் ராஜஸ்தான் 217 ரன்களைக் குவித்தது.

Image result for rcb team 2018 vettori

நேற்று மும்பை இந்தியன்சுக்கு எதிராகவும் கடைசி 5 ஓவர்களில் 70 ரன்கள் பக்கம் வாரி வழங்க ஸ்கோர் 213க்கு உயர்ந்தது.

இது குறித்து டேனியல் வெட்டோரி கூறும்போது, “கடைசி ஓவர்கள் பந்து வீச்சு வெறுப்படையச் செய்கிறது. பெரிய இலக்குகளை விரட்டும் போது கடும் அழுத்தம் ஏற்படுவது இயல்புதான். விராட் கோலி இன்று தனித்துவச் சிறப்புடன் ஆடினார் ஆனால் அவருடன் இணைந்து ஆட ஒருவரும் நிற்கவில்லை. ஆகவே தான் கடைசி 2 போட்டிகளில் கடைசி ஓவர்களில் ரன்கள் அதிகம் கொடுத்த விவகாரம் அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

Image result for rcb team 2018 vettori

எவின் லூயிஸும், ரோஹித் சர்மாவும் ஆக்ரோஷமாக ஆடியதால் சாஹலும், வாஷிங்டன் சுந்தரும் தடுப்பு வியூகத்துக்குச் சென்றார்கள். இன்னும் கொஞ்சம் அட்டாக் செய்திருக்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணி மாறாக தன் ஸ்பின்னர்களைக் கொண்டு வரும்போது அந்த அணி நல்ல நிலையில் இருந்ததால் அவர்கள் எங்களை நெருக்க முடிந்தது. பந்தை தைரியமாக பிளைட் செய்தார்கள் இதனால் அவர்கள் அடைந்த பயன்களை நாம் பார்த்தோம்.

ஆனாலும் மும்பை அபாரமாக பேட் செய்தது, எங்கள் ஸ்பின்னர்கள் பவுலிங்கிற்கும் அவர்கள் ஸ்பின்னர்கள் பவுலிங்கிற்கும் உள்ள வேறுபாடுதான் இதற்குக் காரணம்” என்றார் வெட்டோரி

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்