சிரியா விவகாரத்தில் ரஷ்யாவின் பங்கு ரொம்ப முக்கியம் ! இத்தாலி பிரதமர் பாலோ ஜெண்டிலோனி
இத்தாலி பிரதமர் பாலோ ஜெண்டிலோனி, சிரியா அமைதிப் பேச்சு வார்த்தையில் ரஷ்யாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் பாலோ கூறும்போது, ”சிரியாவில் அமைதியை கொண்டு வருவதில் ரஷ்யா முக்கிய பங்கு வகிக்கிறது. அமெரிக்கா, ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட ரஷ்யாவை வலியுறுத்துகிறோம். இந்த சாலையில் நாம் அனைவரும் பயணிக்க ரஷ்யாவின் உதவி மிக முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.
சிரியாவின் டவுமா பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட ரசாயன ஆயுதத் தாக்குதலில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சிரியா அதிபர் ஆசாத், ரஷ்யா, ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதற்கு பதிலடியாக சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ராணுவ விமானங்கள் தலைநகர் டமாஸ்கஸில் குண்டுமழை பொழிந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் சிரியாவில் ரசாயனத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் டவுமாவில் ஆய்வு செய்ய சர்வதேச குழுவைச் சேர்ந்த ரசாயன ஆய்வாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று ரஷ்யாவும், சிரியாவும் கூறியுள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.