“ஒவ்வொருவரும்,மற்றொருவரை பாதுகாக்க வேண்டும்”-பிரதமர் மோடி வலியுறுத்தல்.

Default Image

விஸ்வரூபம் எடுத்துள்ள கொரொனோ பரவலை தடுக்க நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ‘தடுப்பூசி திருவிழா’ தொடங்கியதாக கூறிய பிரதமர் மோடி,கொரொனோ தொற்றுலிருந்து பாதுகாத்துக்கொள்வது குறித்து மக்களிடம் வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி,நாடுமுழுவதும் Covid-19க்கு எதிராக ஏப்ரல் 11 முதல் 14 வரை  தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ‘டிக்கா உட்சவ்’ என்ற தடுப்பூசி திருவிழாவானது,கோவிட் -19 மீதான இரண்டாவது பெரிய போருக்கான ஆரம்பத்தைக் குறிக்கிறது என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.அதன்பின்னர் கொரொனோ பரவாமல் இருக்க விதிமுறைகளை கையாள்வது குறித்து மக்களுக்கு அறிவுரைகளை வழங்கினார், மேலும் மக்களை தனிப்பட்ட மற்றும் சமூக சுகாதாரம் குறித்து கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி கூறிய நான்கு அறிவுரையானது:

  1. தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் பற்றி புரிதல் இல்லாத முதியவர்கள் அல்லது அதிக கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்கள் தடுப்பூசி பெறுவதற்கு உதவ வேண்டும்.
  2. இதனையடுத்து,குடியிருக்கும் பகுதியில் ஒருவருக்கு கொரொனோ தொற்று வந்தால்,அந்தப் பகுதியை மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்ற வேண்டும்.
  3. மேலும்,மாஸ்க் அணிவதன் மூலம், மக்கள் தங்களையும் மற்றவர்களையும் தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும்.எனவே  மாஸ்க் அணிவது குறித்து மற்றொருவருக்கு ஊக்குவிக்க வேண்டும்.
  4. மக்கள்தொகை அதிகம் உள்ள நம் நாட்டில் இவ்வகையான கட்டுபாடுகளைக் கடைப்பிடிப்பது நோயை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு முக்கியமான வழியாக அமையும்.

மேலும்,”நாட்டின் தடுப்பூசி திறனை சரியான முறையில் பயன்படுத்துவதை நோக்கி நாம் செல்ல வேண்டும். ஏனெனில் நமது நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க இது ஒரு வழியாகும்.மேலும்,மக்களின் பங்கேற்பு,தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு மற்றும் எங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதன் மூலம், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் நாங்கள் மீண்டும் வெற்றி பெறுவோம் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்