ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவால் காலமானார்
விருதுநகர்: நுரையீரல் தொற்று காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ், இன்று காலை சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நடைபெற்றது.திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் 20 தொகுதிகளில் போட்டியிட்டது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக பி.எஸ்.டபிள்யூ. மாதவராவ் போட்டியிட்டார்.இவர் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த பொழுது உடல்நிலை குறைவு ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2 வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.