#Breaking: தமிழகத்தில் 6,000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு.. 23 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,000-ஐ நெருங்கியது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், மார்ச் 10-ம் தேதிக்கு பின் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,000-ஐ நெருங்கவுள்ளது. அந்தவகையில், இன்று ஒரே நாளில் 83,895 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டத்தில், 5,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 9,26,816 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,977 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், 1,952 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,76,257 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 23 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,886 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் 37,673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,989 பேருக்கு கொரோனா பாதிப்பு #CoronaUpdate | #Corona | #TamilNadu pic.twitter.com/P6JCbrvhVn
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) April 10, 2021